Tuesday, May 28, 2013
Saturday, July 14, 2012
ஆரோக்கியமற்ற அதிரை சமுதாய அரசியலுக்கு அய்டாவின் சமாதான வேண்டுகோள்!!
Author: Unknown
| Posted at: 11:05 PM |
|
8
comments

சமீபத்தில் அதிரை பேரூராட்சித் தலைவருக்கும், அதிரை தமுமுக (மமக) அமைப்பினருக்குமிடையே நிலவி வரும் அரசியல் காழ்ப்புணர்சிகள் வெளிநாடு வாழ் அதிரையர்களை பெரும் அதிருப்தியிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. மாட்டுக்கறி என்ற பிரச்சனையை வைத்து முதலில் தமுமுக நிர்வாகி இணையதளத்தில் பேட்டி கொடுத்ததும் அதனை தொடர்ந்து பேரூராட்சித் தலைவர் பேட்டிக் கொடுத்ததும் பின்பு மாறி மாறி பேட்டி கொடுத்து வெளிநாட்டு மக்களுக்கு உண்மையை சொல்கிறோம் என்று சளிப்பையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளனர்.
வீட்டை விட்டு குடும்பத்தை விட்டு பொருளீட்ட அயல்நாடு வந்த நாம், ஊரில் நம் சகோதரர்களுக்கிடையே அடிக்கடி ஏற்படும் அவசியமற்ற மோதல்களால் பெரும் கவலை அடைந்துள்ளோம்.
தங்களது அரசியல் ஆதாயத்திற்காக மோதிக் கொள்வதும்.... மாறி மாறி வசை பாடுவதும், இப்படி பேட்டி கொடுப்பதும் போஸ்டர் ஒட்டுவதும் நமதூர் சமுதாய அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் பொழுதுபோக்காக இருக்கலாம் ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் பெரும்பான்மையான நடுநிலையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் செயல்.
இருதரப்பினரும் இஸ்லாமியர்கள் என்பதை நினைவில் கொண்டு அல்லாஹ் நம்மை பார்த்துக் கொண்டு இருக்கிறான், என்பதையும் அவனை அன்றி நம்மால் எதுவும் செய்துவிட முடியாது என்பதையும் மனதில் நிறுத்திக் கொள்வோம்.
இந்நிலையில், நேற்று (13/07/2012) வெள்ளிக் கிழமை மாலை ஜித்தா தமுமுக அமைப்பு நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் ஆம்பூர் ம.ம.க எம்.எல்.ஏ அஸ்லம் பாஷா அவர்கள் கலந்துகொள்ள வந்திருந்தார், அது சமயம் AYDAவின் சார்பாக அவர்களை சந்தித்து நமதூர் அரசியல் நிலை குறித்து பெரும் கவலை கொண்டு எடுத்துக் கூறப் பட்டதோடு மட்டுமல்லாமல் இருதரப்பினருக்கும் ஒற்றுமையை ஏற்படுத்த மேலிடம் முயற்சிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப் பட்டது. அவரும் மேலிடத்துக்கு தெரியப்படுத்தி பிரச்சினையை சுமூகமாக முடிக்க ஆவன செய்வதாக ஒப்புதல் கொடுத்தார்.
சங்கை மிகு ரமலான் மாதம் நெருங்கி வரும் இவ்வேலையில் இந்த நல்ல தருனத்தில் இரு தரப்பினரும் பரஸ்பரம் பழையதை மறந்து ஒற்றுமையுடன் செயல் படவேண்டும் எனபதை அய்டாவின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இந்த வேண்டுகோள் யாருக்கும் சார்பாகவோ அல்லது எதிராகவோ வைக்கப்பட்டது இல்லை மாறாக வெளிநாட்டில் இருக்கும் அப்பாவி அதிரை மக்களுக்கு ஊரில் உள்ள உற்றார் உரவினர் ஒற்றுமையுடனும் பாதுகாப்புடனும் வாழ வேண்டும் என்பதற்காக வேண்டப்படும் வேண்டுகோள்.
இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.
ஆதாரம்: ஷஹீஹுல் புஹாரி- பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7138
இன்ஷா அல்லாஹ், வல்ல இறைவன் இனி வரும் காலங்களில் நம் அனைவரையும் ஒற்றுமை என்னும் ஒருகோட்டில் நிறுத்தி நம் சமுதாயம் முன்னேற, வாழ்க்கை வளம் பெற உதவி செய்வானாக - ஆமீன்.
AYDA JEDDAH
Friday, July 6, 2012
Author: Unknown
| Posted at: 9:27 AM |
|
3
comments

கள்ள மனம் இல்லா ...!

நல்லவர்கள் போற்றும் ..
உன்னதமானதொரு சங்கையுள்ள மாதம் ..
பஞ்சமில்லா ஊரில் ...
பசித்திருக்கும் மாதம் ..
பசிஎனும் கொடுமை
பணக்காரன் அறிய
வல்ல இறை வகுத்தளித்த மாதம்
வாதங்கள் செய்தால் ..
வைத்திருக்கேன் நோன்பு என்று
தவிர்க்க சொன்ன நபி (ஸல் )போற்றும் மாதம்
பேதங்கள் பேசாது திரு மறை வேதம் ஓதும் மாதம்
ஒன்றுக்கு பத்தென்று
பல மடங்கு நன்மைகள்
குவிக்க வாய்ப்பு தரும் நல்லதொரு மாதம்
பேரொளியாம் அல்லாஹ்வின்
திருமறை நமக்கு வந்திறங்கிய நல்லதொரு மாதம்
ஆயிரம் மாதங்களைவிட ..
சிறந்த இரவாம் லைலதுல் கதிரிரவை
தாங்கி வரும் தங்கமென மிளிரும் மாதம்
முழு நாளும் உழைத்தாலும்
ஒரு நூறை சேமிக்க முடியாமல்
தள்ளாடும் முமினான ஏழைக்கு
சில நூறை கொடுத்து சிறப்பிக்கும்
நல்ல மாதம் ....
சில்லறையை எண்ணிய கைகள்
கரன்சிகளை காணும் ஏழைக்கு
கண்ணியம் தரும் மாதம் ..
ஜக்காத் எனும் நான்காம் கடமையை
நன்றே தெரிந்த நம்மவர் ...
நம்மையை பத்தாய் பெருக்கி பெற்றிட
நல தருமம் செய்ய தூண்டிடும் நர்மாதம்
ஏழையின் சிரிப்பு ..
பணக்காரனின் பசி வாட்டம் ..
சிறுவர்கள் நோன்பிருந்து ..ஆசையாய்
பண்டங்கள் பலவைத்து நோன்பு திறந்து மகிழும்
மங்கள நிகழ்வு மகிமையான மாதம் ..
ரமலானின் வருகைக்கு ..
ஷபானிலே வரவேற்க
காத்திருந்த நபி (ஸல் )அவர்கள்அன்பு பெற்ற மாதம்
பள்ளிகளில் அமல்
பளிச்சென தெரியும் ..
இரவில் தராவிஹ் தொழுகை
பகலில் பசித்திருந்து தவம்
ஒரு வருட தவ உணர்வு ஒரு மாதத்தில்
மகிழ்வுகளை அள்ளி தரும் புண்ணிய மாதம்
மாதம் அது மணித்துளியாய் கரைந்து போக
பெருநாள்;அன்று புத்தாடை உடுத்தி
குதூகலமாய் கொண்டாடி மகிழ்ந்து
இன்பமாய் கொண்டாடினாலும்
மறுநாள் ரமலான் பிரிந்த சோகம்
நம்மை தொற்றிக்கொள்ளும்
மறு பிறை காண காத்திருக்க
மறு பிறை காண
வான் நோக்கும் நம் கூட்டம்
வானே புன்னகைக்கும்
வளைந்த ஒளிக்கீற்றாய்
அதுதான் முதல் பிறை ..
ரமலான் வந்ததும் மறு குதூகலம்
ஏழையின் சிரிப்புடன் ரமளானின் துவக்கம் .....
தொடரும் இன்பங்கள் ..கருகும் துன்பங்கள்
து ஆக்கள் ,கபூலாகும் தருணம்
தயாராகுங்கள் ..பாவம் போக்கி நன்மை சேர்ப்போம் ..!
Wednesday, December 21, 2011
Wednesday, November 9, 2011
ஹஜ் 2011, ஹாஜிகள் உதவிப் பணியில் India Fraternity Forum தொண்டர்கள!
Author: Unknown
| Posted at: 5:12 PM |
Filed Under:
இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபாரம்,
ஹஜ் 2011,
ஹஜ் களம்
|
1 comments

ஹஜ் 2011 புனிதக்கடமை துல்ஹஜ் பிறை 13 உடன் கிட்டதட்ட முடிவுக்கு வந்துவிட்டது.
சுமார் 5,6 நாட்கள் நடக்கும் இந்த புனித கடமைக்கு நிறைய தன்னார்வலர்கள் தன்னால் ஆன உதவியை ஹாஜிகளுக்கு வழங்கி தன் ஆத்ம திருப்தியை அடைவதோடு ஹாஜிகளின் துஆ வில் தங்களையும் பயன் படுத்திக் கொள்கின்றனர்.
அந்த வகையில் India Fraternity Forum என்ற தன்னார்வல அமைப்பு ஹாஜிகளுக்கு உதவுவதில் தனி அங்கம் வகிக்கிறது.
ஹஜ் களத்தில் அங்கும் இங்குமாக பிரிந்து சிதறி கிடக்கும் ஹாஜிகளுக்கு, அந்த புனித இடத்தின் புதிய தோற்றம், மலைகள், குறுக்கும் நெடுக்குமான பாதைகள், அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டம், புதிய பாஷை(மொழி) போன்ற புதிய அனுபவம். ஹாஜிகளை கொஞ்சம் திக்குமுகாட வைத்துவிடும். இதுபோன்று தடுமாறிக்கொண்டு இருக்கும் ஹாஜிகளுக்கு உதவுவதற்காக, களம் இறங்கி இவ்வமைப்பு களப் பணி ஆற்றுகிறது.
தமிழ்நாடு,கேரளா, ஹைதராபாத், கர்நாடகா, இன்னும் சில மாநிலங்களை சார்ந்த தொண்டர்கள் இச்சேவையில் முக்கிய அங்கம் வகிக்கின்றனர்.
காணாமல் போன நமதூர் ஹாஜிகள் சிலரை அவரவர் இருப்பிடத்திற்கு கொண்டு சென்று விட்டதில் இவ்வமைப்பினர் முக்கிய பங்கு வகித்தனர்.
Saturday, November 5, 2011
ஹஜ் அரஃபா நேரலை
Author: Unknown
| Posted at: 11:51 AM |
Filed Under:
ஹஜ்
|
1 comments

Wait upto 1 minute to Watch Islam Tv Live
Friday, November 4, 2011
புனித மினாவில் ஹாஜிகள்!
Author: Unknown
| Posted at: 3:03 PM |
Filed Under:
ஹஜ் மினா பிரார்தனை
|
0
comments


புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற உலகெங்கிலுமிருந்து வந்துள்ள ஹாஜிகள் மக்காவிலிருந்து மினாவை நோக்கி நேற்று முதல் நகர தொடங்கி விட்டனர்.
ஹஜ் கமிட்டி மற்றும் இதர ட்ராவல் நிருவனங்களின் மூலம் நம்தூரிலிருந்து வந்துள்ள ஹாஜிகள் அனைவரும் மினாவில் நல்ல படியாக உள்ளனர். இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை (துல் ஹஜ் பிறை 9) ஹஜ்ஜின் முக்கிய தினமான, அரஃபா தினத்தில் அணைத்து ஹாஜிகளும் சுபுஹு தொழுகைக்கு பிறகு அரஃபா மைதானைத்தை நோக்கி பயனிப்பர்.
Subscribe to:
Posts (Atom)