Wednesday, December 21, 2011

death news

Continue Reading...

Wednesday, November 9, 2011

ஹஜ் 2011, ஹாஜிகள் உதவிப் பணியில் India Fraternity Forum தொண்டர்கள!



ஹஜ் 2011 புனிதக்கடமை துல்ஹஜ் பிறை 13 உடன் கிட்டதட்ட முடிவுக்கு வந்துவிட்டது.

சுமார் 5,6 நாட்கள் நடக்கும் இந்த புனித கடமைக்கு நிறைய தன்னார்வலர்கள் தன்னால் ஆன உதவியை ஹாஜிகளுக்கு வழங்கி தன் ஆத்ம திருப்தியை அடைவதோடு ஹாஜிகளின் துஆ வில் தங்களையும் பயன் படுத்திக் கொள்கின்றனர்.

அந்த வகையில் India Fraternity Forum என்ற தன்னார்வல அமைப்பு ஹாஜிகளுக்கு உதவுவதில் தனி அங்கம் வகிக்கிறது.

ஹஜ் களத்தில் அங்கும் இங்குமாக பிரிந்து சிதறி கிடக்கும் ஹாஜிகளுக்கு, அந்த புனித இடத்தின் புதிய தோற்றம், மலைகள், குறுக்கும் நெடுக்குமான பாதைகள், அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டம், புதிய பாஷை(மொழி) போன்ற புதிய அனுபவம். ஹாஜிகளை கொஞ்சம் திக்குமுகாட வைத்துவிடும். இதுபோன்று தடுமாறிக்கொண்டு இருக்கும் ஹாஜிகளுக்கு உதவுவதற்காக, களம் இறங்கி இவ்வமைப்பு களப் பணி ஆற்றுகிறது.

தமிழ்நாடு,கேரளா, ஹைதராபாத், கர்நாடகா, இன்னும் சில மாநிலங்களை சார்ந்த தொண்டர்கள் இச்சேவையில் முக்கிய அங்கம் வகிக்கின்றனர்.

காணாமல் போன நமதூர் ஹாஜிகள் சிலரை அவரவர் இருப்பிடத்திற்கு கொண்டு சென்று விட்டதில் இவ்வமைப்பினர் முக்கிய பங்கு வகித்தனர்.


Continue Reading...

Saturday, November 5, 2011

ஹஜ் அரஃபா நேரலை


Wait upto 1 minute to Watch Islam Tv Live
Continue Reading...

Friday, November 4, 2011

புனித மினாவில் ஹாஜிகள்!


புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற உலகெங்கிலுமிருந்து வந்துள்ள ஹாஜிகள் மக்காவிலிருந்து மினாவை நோக்கி நேற்று முதல் நகர தொடங்கி விட்டனர்.

ஹஜ் கமிட்டி மற்றும் இதர ட்ராவல் நிருவனங்களின் மூலம் நம்தூரிலிருந்து வந்துள்ள ஹாஜிகள் அனைவரும் மினாவில் நல்ல படியாக உள்ளனர். இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை (துல் ஹஜ் பிறை 9) ஹஜ்ஜின் முக்கிய தினமான, அரஃபா தினத்தில் அணைத்து ஹாஜிகளும் சுபுஹு தொழுகைக்கு பிறகு அரஃபா மைதானைத்தை நோக்கி பயனிப்பர்.
Continue Reading...

Tuesday, October 25, 2011

அதிரை பேரூராட்சி தலைவர் S.H.அவர்களுக்கு அய்டாவின் வாழ்தறை , மற்றும் வேண்டுகோள்!

பேரூராட்சி தலைவர் சகோ.S.H.அஸ்லம் அவர்களுக்கும், மற்றும் 21 வார்டு உறுப்பினர்களுக்கும், அய்டா (ஜித்தா)வின் பாராடுக்களும், வாழ்த்துக்களும் சில வேண்டுகோள்களும். (காணொளி).

Continue Reading...

பேரூராட்சி தலைவர் சகோ.அஸ்லம் அவர்களுக்கு அய்டாவின் வாழ்துரைகளும் வேண்டுகோள்களும், (காணொளி)!

பேரூராட்சி தலைவர் சகோ.S.H.அஸ்லம் அவர்களுக்கும், மற்றும் 21 வார்டு உறுப்பினர்களுக்கும், அய்டா (ஜித்தா)வின் பாராடுக்களும், வாழ்த்துக்களும் சில வேண்டுகோள்களும். (காணொளி).

Continue Reading...

Tuesday, October 18, 2011

அய்டாவின் தன்னிலை விளக்கம்!

அஸ்ஸலாமு அலைக்கும்,

அய்டா என்பது பொது நல அமைப்பாக இருந்தாலும், ஒரு பொதுவான நல்ல தலைவரை தேர்ந்து எடுக்க எப்படிஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கி--றதோ அதே உரிமை,அய்டா மட்டும் அல்ல,அய்டா போன்ற அனைத்துபொதுநல அமைப்புகளுக்கும் தலையாய கடமையாகும்.
நிற்க, ஆரம்பத்திலிருந்து இன்றுவரை அய்டா எந்த ஒரு நிறுவனத்தின் கிளையாக இருந்ததில்லை/இருக்கவில்லை. மாறாக AYDA முழு சுதந்திரத்தோடு அனைத்து தரப்பட்ட அதிரைவாசிகளின் நலனுக்காகத்தான் இருக்க விரும்புகிறது. அது மட்டுமல்லாது கடந்த 5 வருடங்களாக அதிரை பைத்துல்மாலுக்கு உதவி செய்ததைவிட மற்ற தொண்டு நிறுவனகளுக்குதான் பல மடங்கு அதிகமாக உதவி இருக்கிறோம்.


AYDAவின் தேர்தல் நிலைப்பாடு ஒரு சில மக்களுக்கு கவலையான மற்றும் குழப்பமான சூழ்நிலை ஏற்படுத்திவுள்ளது என்பது ஓரளவு உண்மை என்றாலும், ஒட்டு மொத்த அதிரை மக்களும் கீழ்கண்ட குழப்பமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதால்தான், நாங்களும் இதில் கொஞ்சம் கூடுதல கவனம் செலுத்த வேண்டி இருந்தது.

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் நமதூர் மக்கள் நலன் கருதி வரக்கூடிய தேர்தலில் நம்மில் ஒருவரை முன்னிறுத்தி ஒரே கோட்டில் எல்லோரையும் நிற்க வைக்கும் முயற்சியில் இறங்கிய அடுத்த கணமே, போட்டா போட்டி கொண்டு தன்னிடம் உள்ள செல்வாக்கு மற்றும் பண பலத்தை வைத்து எல்லா அரசியல் கட்சியின் கதவையும் தட்டி, ஒரு வழியாக ஒவ்வொருவரும் மாநிலத்தின் பலம் வாய்ந்த கட்சியில் சீட்டு வாங்கி, ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினார்கள். அப்படி செல்வாக்கு மற்றும் பண பலம் இல்லாவிட்டால் அந்த பலம் வாய்ந்த கட்சியிளில் சீட்டு கிடைத்திருக்குமா என்றால் அது கேள்விக்குறியே! அதோடு அல்லாமல் பலம் வாய்ந்த ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் உட்பட்டவர்கள் என்பதால் தான், தமக்கு பெரிய கட்சிகளின் சீட்டு கிடைத்தது என்று அவர்களுக்கும் நன்றாக தெரியும்.
கடந்த 40 வருடமாக நமதூரை ஆட்சி செய்தவர்களும் அரசியல் வாழ்க்கை நடத்தியவர்களும் பெயர் சொல்லும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. மாறாக தேவையற்ற பிரச்சனைகளை தான் அதிகமாக கிளப்பி விட்டு இருக்கிறார்கள். ஆனால் நமதூரில் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்தான் ஏதோ வந்தோம் இருந்தோம் என்றில்லாமல் கல்வி, வணக்கஸ்தலம், மருத்துவமனை, மின்சாரம், இன்னும் பல எத்தனையோ அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மிகப்பெரும் தூணாக நின்று செய்தார்கள். அப்படியும் ஊர் நன்மைக்காக தானாக முன்வந்து செய்யகூடியவர்களை கட்சிக்காரர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்களா என்றால் அதுவும் இல்லை, மாறாக எங்களை மதிக்கவில்லை என்று சொல்லி மழுப்பி விடுகிறார்கள். காரணம், கட்சிகாரர்கள், காண்ட்ராக்ட்காரர்கள், வட்ட, மாவட்ட தலைவர், மற்றும் MLA க்களுக்கு விருந்து கொடுத்து திருப்தி படுத்தவே நேரம் சரியாக இருக்கும். அவ்வழியே புதிதாக அரசியலில் நுழைந்திருக்கும் நம்மவர்களிடமும் எப்படி நாம் ஒரு புது மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்.

அதனால் அந்த வகையில் சகோ. முனாஃப் என்று, ஒருதலை பட்சமாக இல்லாமல் 40 வருடத்திற்கு பிறகாவது ஒரு சுயேச்சை வேட்பாளரை தேர்தெடுக்க ஒரு புதிய முயற்சியை கையாள்வோம், என்பது மட்டுமல்லாமல் வருங்காலத்தில் வரக்கூடிய தேர்தலில் 70 வருட பாரம்பரியமிக்க ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் இதர சங்கங்களையும் மதிப்பளிக்க கூடிய மனிதரைத்தான் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்த்டுப்போம் என்பதன் தொடக்கம் தான் இது.

அதைவிட கட்சியின் சார்பாக நிற்பவர்கள் நமதூர் மக்களுக்கு பண பட்டுவாடா செய்து சுயமரியாதையுடன் வாழும் நம் ஒவ்வொருவரையும் கேவலப்படுத்தி இருக்கிறார்கள். இந்த வகையில் சகோ. முனாப் அவர்கள் தேர்தல் கமிஷனுக்கு உட்பட்ட பணத்தை மட்டும் செலவு செய்து அவர் எளிமையாக வாக்கு சேகரிக்கிறார். அதனால் தான் ஹராம் ஹலால் பேனக்கூடியவர் என்று குறிப்பிட்டோம். அப்படி ஒரு வேலை சகோ. முனாபும் பணப்பட்டுவாடா செய்து ஆடம்பரமாக வாக்கு சேகரித்திருந்தால் நாங்கள் (சுயேச்சை வேட்பாளரான) முனாஃபுக்காக மக்களிடம் கேட்ட வாக்கை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக திரும்ப பெற தயாராக இருக்கிறோம்.


நிற்க, கண்டிப்பாக நாம் யாராவது ஒரு வேட்பாளரை மறைமுகமாக ஆதரிக்கத்தான் போகிறோம், ஊர் ஒற்றுமை என்ற பெயரில் இரட்டை வேடம் போடுவதில் அர்த்தமில்லை, (ஓட்டு கேட்டு வரும் அனைத்து வேட்பாளர்களிடமும்உங்களுக்குத்தான் எங்கள் ஓட்டு என்று சொல்லிவிட்டு முனாஃபிக் தனமாகஒருவருக்கு மட்டும் தான் ஓட்டுபோடப்போகிறோம், பாவம் அந்த வேட்பாளர் தான் அறியமாட்டார் ஆனால் நம்மை படைத்த இறைவன்நன்கறிவான்) எனவே உள் ஒன்று வைத்து புறம் ஒன்று சொல்வதில் அய்டாவுக்கு உடன்பாடு இல்லை.



குறிப்பு:
நாங்கள் எந்த வேட்பாளரையும் குறைகூறவில்லை. 'எல்லோரும் சிறந்--தவர்களே' என்றே சொல்லியுள்ளோம்.இவரிடம் சற்று நிறை கூடுதல் தெ--ன்படவே ஒருமித்தக் கருத்து ஓங்கியது! அய்டாவின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அனைத்துவேட்பாளர்களும் ஏதாவது ஒரு வகையில் வேண்டியவர்களாகவும், உறவினர்களாகவுமே இருக்கின்றனர்.. எனினும் ஊர் நலனில் உண்மையான அக்கறை கொண்டு யார் முன்வந்தாலும் 'யாருக்கு பொறுப்பு தரப்பட்டாலும்' அன்புடன்அய்டா பாசமிகு நேசக்கரம் நீட்டும்.


வஸ்ஸலாம்.

AYDA
Continue Reading...

Sunday, October 16, 2011

வழக்குரைஞர் முனாஃப் அவர்களுக்கு வாக்களியுங்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
பெருமதிப்பிற்குரிய வாக்கால பெருமக்களே, உங்கள் பொன்னான வாக்குகளை உங்கள் கண்ணான வேட்பாளருக்கு அளிக்க இருக்கும் இத்தருணத்தில் கடல்கடந்து, உற்றார் உறவினரை துறந்து தூர தேசங்களில் பொருளீட்டும் நோக்கில், சவுதியில் புனித மக்காவிற்கும், மதீனாவிற்கும், அருகில் உள்ள, ஜித்தாவில் வசித்து வரும் AYDA (அதிரை இளைஞர் மேம்பாட்டுக் கழகம்) ஊர் மக்களிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறோம்.
கடந்த 20 வருடங்களாக, ஒரு குழுமமாக இயங்கி வரும் நாங்கள்(அய்டா), ஊர் நலனில் அக்கறை கொண்டு நல்ல பல திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்து பல தர்ம காரியங்களை அல்லாஹ்வுக்காக செய்து வருகிறோம்.

மேலும் அதிரை பைத்துல்மால் உருவாவதற்க்கு முக்கிய காரணியாகவும் அதன் வளர்ச்சியில் தொன்று தொட்டு தோள் கொடுத்து வருகிறோம்.
தற்போதைய உள்ளாட்சி தேர்தலில் நமதூரின் தலைவர் பதவிக்கு நமது சகோதரர்கள் பலர் போட்டியிடுகின்றனர். அவர்கள் அனைவரும் சிறப்பானவர்களே, எனினும் அவர்களில் நமது சகோதரர் வழக்குறைஞர். A முனாஃப் அவர்கள் ஊர் தலைவர் பொருப்புக்கு மிகச் சிறந்தவர் ஆவார் ஏனெனில்,

  • ஹராம், ஹலால் பேணக்கூடிய படித்த பண்பாளர்.
  • பொது வாழ்வில் இளம் பிராயத்திலிருந்தே தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
  • எளிய அணுகுமுறை கொண்ட இனிய நண்பர்.
  • உள்ளூரிலேயே உத்தியோகம், ஊர் சேவை என்று உழன்று திரிபவர்.
  • மற்றுமத அண்பர்களின் மாசற்ற நட்புக்குறியவர்.
  • வரியவர்களோ, மகளிரோ எந்த நேரத்திலும் அச்சமின்றி சந்திக்க ஏதுவானவர்.
  • மத்திய, மாநில மற்றும் தொண்டு நிருவனங்களின் அலுவலர்களுடன் நெருக்கமானவர்.
மேற்கண்ட சிறப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு ஜித்தா வாழ் அதிரைவாசிகள் அனைவரும் வழக்குறைஞர் முனாஃப் அவர்களை, ஆதரிப்பது என்று ஏகோபித்த மனதுடன் எங்கள் பொதுக்குழுவில் முடிவு எடுத்துள்ளோம்.

வாகளிக்க இயலாத வெகு தூரத்தில் இருக்கும் நாங்கள் உங்கள் பொண்ணான வாக்குகளை சிந்தாமல் சிதராமல் வழக்குரைஞர்
A. முனாஃப் அவர்களுக்கு பேரூந்து சின்னத்தில் வாக்களித்து, இந்த நல்ல மனிதரை வெற்றியடைய செய்ய வேண்டுமாய் மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இங்ஙணம்,

அதிரை இளைஞர் மேம்பாட்டுக் கழகம் - AYDA,
ஜித்தா, சவூதி அரேபியா.
Continue Reading...

Wednesday, October 5, 2011

T.R.பாலுவுடன் அதிரை முக்கியஸ்தர்கள் சந்திப்பு!



நன்றி :- அதிரை பி.பி.சி
Continue Reading...

Monday, August 15, 2011

ஜகாத் சட்டதிட்டங்கள்





Continue Reading...

Sunday, August 7, 2011

அய்டாவின் இஃப்தார் அழைபிதழ்

அஸ்ஸலாமு அலைக்கும்

வரும் ரமளான் பிறை 7 (ஆகஸ்ட் 07,.2011) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு, தங்களை அதிரை நண்பர்களுடனும்,குடும்பத்தினருடனும் அய்டாவின் இஃப்தார் நிகழ்ச்சிக்கு வருகை தரும்படி அன்புடன் அழைக்கிறோம்

இடம்
இம்பாலா உணவகம் ஷரஃபியா - ஜித்தா


அன்புடன்

அய்டா நிர்வாகிகள்
Continue Reading...

Saturday, July 30, 2011

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார்.


தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று 22ம் ஆண்டை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய சில கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை வலீத் என மாற்றும் எண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார். தற்சமயம் வரை தன் பெயரான வெய்ன் தில்லன் பர்னலை மாற்றவில்லை என்றும் எதிர்காலத்தில் புதிதாய் பிறந்த மகன் என பொருள்படும் வலீத் என்ற பெயரை வைக்க நினைப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவ்வறிக்கையில் தான் முதல் முறையாக ரமலான் மாதத்தை அடைய இருப்பதால் தான் முதன் முறையாக நோன்பு இருப்பதை குறித்து மிக சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தை மதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர் அதை மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மேலாளர் முஹம்மது மூஸாஜீ பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொள்வது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும் இவ்விஷயத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் முஸ்லீம் வீர்ர்கள் ஹாஷிம் அம்லா மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் பர்னெல் இஸ்லாத்தில் தீவிரமாக உள்ளதாகவும் சமீபத்திய ஐ.பி.எல் போட்டியிலிருந்து ஒரு சொட்டு மதுவும் அருந்தவில்லை என்றும் தெரிவித்தனர். இதில் அம்லாவின் பங்கு ஏதுமில்லை என்றாலும் ஹாஷிம் அம்லா மிக கட்டுபாட்டுடனும் தன் மதத்தை பின்பற்றுவதில் காட்டும் உறுதியும் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றனர். ஹாஷிம் அம்லா இஸ்லாத்தின் ரோல் மாடலாக விளங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் மது பரிமாறப்படும் கேளிக்கைகளில் பங்கேற்க மறுப்பது, சுற்றுபயணத்தில் கூட தன் தொழுகைகளில் உறுதியாய் இருத்தல், தென் ஆப்பிரிக்க அணியினரின் ஸ்பான்ஸரான பீர் நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட ஆடையை அணிய மறுப்பது போன்றவைகளின் மூலம் அவரை அறியாமலேயே ஹாஷிம் அம்லா பிறர் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் தோன்ற காரணமாக இருக்கின்றனர் என்றனர். 2006 ஆம் ஆண்டு யூசுப் யோஹன்னவாக இருந்து இஸ்லாத்திற்கு மாறிய முஹம்மது யூசுப்பை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட இரண்டாவது கிரிக்கெட் வீர்ர் பர்னெல் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

http://inneram.com/
Continue Reading...

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார்.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று 22ம் ஆண்டை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய சில கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை வலீத் என மாற்றும் எண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார். தற்சமயம் வரை தன் பெயரான வெய்ன் தில்லன் பர்னலை மாற்றவில்லை என்றும் எதிர்காலத்தில் புதிதாய் பிறந்த மகன் என பொருள்படும் வலீத் என்ற பெயரை வைக்க நினைப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவ்வறிக்கையில் தான் முதல் முறையாக ரமலான் மாதத்தை அடைய இருப்பதால் தான் முதன் முறையாக நோன்பு இருப்பதை குறித்து மிக சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தை மதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர் அதை மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மேலாளர் முஹம்மது மூஸாஜீ பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொள்வது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும் இவ்விஷயத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் முஸ்லீம் வீர்ர்கள் ஹாஷிம் அம்லா மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் பர்னெல் இஸ்லாத்தில் தீவிரமாக உள்ளதாகவும் சமீபத்திய ஐ.பி.எல் போட்டியிலிருந்து ஒரு சொட்டு மதுவும் அருந்தவில்லை என்றும் தெரிவித்தனர். இதில் அம்லாவின் பங்கு ஏதுமில்லை என்றாலும் ஹாஷிம் அம்லா மிக கட்டுபாட்டுடனும் தன் மதத்தை பின்பற்றுவதில் காட்டும் உறுதியும் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றனர். ஹாஷிம் அம்லா இஸ்லாத்தின் ரோல் மாடலாக விளங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் மது பரிமாறப்படும் கேளிக்கைகளில் பங்கேற்க மறுப்பது, சுற்றுபயணத்தில் கூட தன் தொழுகைகளில் உறுதியாய் இருத்தல், தென் ஆப்பிரிக்க அணியினரின் ஸ்பான்ஸரான பீர் நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட ஆடையை அணிய மறுப்பது போன்றவைகளின் மூலம் அவரை அறியாமலேயே ஹாஷிம் அம்லா பிறர் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் தோன்ற காரணமாக இருக்கின்றனர் என்றனர். 2006 ஆம் ஆண்டு யூசுப் யோஹன்னவாக இருந்து இஸ்லாத்திற்கு மாறிய முஹம்மது யூசுப்பை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட இரண்டாவது கிரிக்கெட் வீர்ர் பர்னெல் என்பது குறிப்பிடத்தக்கது.
Continue Reading...

Friday, July 1, 2011

மரண அறிவிப்பு.

அஸ்ஸலாமு அலைக்கும்,

புதுமனை தெருவை சார்ந்த மர்ஹும் முகமது ஸாலிஹ், அவர்களின்மகனும் ,சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் ஜனாப் உமர் அவர்களின் மச்சானும்,
அப்துல் லத்திப் ,அமோஜா ட்ராவல்ஸ் தமீம் இவர்களின் மாமனாருமான ஹாஜி முகமது தாஹா இன்று காலை சவுதியிலிருந்து விடுமுறையில் ஊர் சென்றிருந்தபொழுது சென்னைவிமான நிலையத்தில் காலமாகிவிட்டார்கள.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

இவர்கள் ஜித்தாவில் உள்ள நிஹாத் அரப் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தார்கள் என்பதும் அய்டாவின் மூத்த ஆலோசகர் ஹாஜி ஜனாப் பஷீர் காக்கா அவர்களின் மச்சான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Continue Reading...

Tuesday, May 17, 2011

16,00,000

16,00,000
வாயைப் பிளந்து பயந்துவிடாதீர்கள்.
ஊழலில் சம்பந்தப்பட்ட கோடிகள் அல்ல இந்த எண்ணிக்கை.
நல்ல விஷயம்தான். வரும் ஆண்டு, இதே எண்ணிக்கையில் புதியவேலைவாய்ப்புகள் இந்திய இளைஞர்களுக்கு
கிடைக்கப் போகிறது.


‘வறுமையின் நிறம் சிகப்பு’, ‘பட்டம் பறக்கட்டும்’ – இதெல்லாம் எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் தொடக்கத்திலும் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் தலைப்பு. அந்த காலக்கட்டத்தில் சமூகத்தின் மிகப்பெரிய பிரச்சினையாக வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடியது. மேற்கண்ட திரைப்படங்கள், ஊடகங்கள் அப்பிரச்சினையை அக்காலத்தில் பிரதிபலித்ததற்கு சாட்சி.
இன்று யாராவது எனக்கு வேலை கிடைக்கவில்லை என்று சொன்னால் அது சமூகத்தின், தேசத்தின் குற்றமல்ல. சம்பந்தப்பட்ட நபர் மீதுதான் பிரச்சினை இருக்கக்கூடும். வேலையில்லா பட்டதாரி என்கிற சொல்லே வழக்கொழிந்துக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்து எடுக்கப்பட்ட கணிப்பு ஒன்று இந்த கூற்றினை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. மனிதவளத் துறையில் இந்தியாவின் முன்னோடி நிறுவனங்களில் ஒன்று மாஃபா ராண்ட்ஸ்டாட். சென்னையை தலைமையகமாக கொண்ட இந்நிறுவனம் வருடா வருடம் வேலைவாய்ப்புச் சந்தை குறித்த துல்லியமான கருத்துக் கணிப்பு ஒன்றினை நடத்தி, வெளியிடுவது வழக்கம்.
கடந்த 2010ஆம் ஆண்டு கருத்துக் கணிப்பில் பத்து லட்சத்துக்கும் மேலான புதிய வேலைகள் உருவாகும் என்று கணித்திருந்தார்கள். 11,31,643 பேருக்கு வேலை கிடைத்தது. அதிகபட்சமாக, சுகாதாரத்துறையில் (Healthcare) 2,54,655 பேருக்கும், விருந்தோம்பல் (Hospitality) துறையில் 1,60,300 பேருக்கும், ரியல் எஸ்டேட் துறையில் 1,29,312 பேருக்கும் வேலை கிடைத்தது. மும்பை, டெல்லி, சென்னை நகரங்கள் மட்டுமே 2,55,797 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தது என்பது இங்கே குறிப்பிடத்தகுந்த விஷயம்.

இந்த ஆண்டு எப்படி இருக்கும்?

சமீபத்தில் மாஃபா ராண்ட்ஸ்டாட் எடுத்திருக்கும் கணிப்பில் மொத்தமாக பதினாறு லட்சம் புதிய வேலைகள் அமைப்புரீதியான நிறுவனங்களில் உருவாக்கப்படும் என்று தெரியவந்திருக்கிறது. பதிமூன்று தொழில் வகைகள், 650 நிறுவனங்கள், எட்டு பெரிய நகரங்கள் என்று கருத்தில் எடுத்துக்கொண்டு இந்த கணிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
இவ்வாண்டும் சுகாதாரத்துறையே அதிக வேலைகளை தருவதில் முன்னணி வகிக்கும் என்று தெரிகிறது. இத்துறையில் மட்டுமே 2,48,500 புதிய வேலைகள் உருவாகலாம். விருந்தோம்பல் – 2,18,200, ரியல் எஸ்டேட் – 1,44,700, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு – 1,26,100, தயாரிப்புத்துறையும் (இயந்திரத் தயாரிப்பு தவிர்த்து) லட்சக்கணக்கில் புதிய வேலைகளை உருவாக்கித் தரும்.
வரும் கல்வியாண்டில் தாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தொழில்சார்ந்த மேற்படிப்புகளை, மாணவர்கள் அடையாளம் காண ஏதுவாக மாஃபா ராண்ட்ஸ்டாட்டின் கணிப்புகளை துறைவாரியாக கீழே தருகிறோம். ஒவ்வொரு துறை குறித்தும் சுருக்கமான, தீர்க்கமான அறிதலை இதன் மூலம் அனைவரும் பெறலாம். (கீழே வளர்ச்சி என்று குறிப்பிடப் படுவதை, சம்பந்தப்பட்ட துறை வேலைவாய்ப்பில் ஏற்படுத்திய, ஏற்படுத்தப்போகும் வளர்ச்சி என்பதாக அறிக)

வங்கி, நிதி மற்றும் இன்சூரன்ஸ் (Banking Financial Services & Insuranc)

தற்போதைய பணியாளர்கள் : 9,07,960
கணிக்கப்படும் புதிய வேலைகள் : 80,700
நிலையான, நேர்மறையான சிந்தனைகள் நிலவும் துறை. 2010ன் இறுதிக் காலாண்டில் இத்துறையின் சிறப்பான முன்னேற்றம் நம்பிக்கையை தருகிறது. குறுங்கடன், இன்சூரன்ஸ், வணிகத்துக்கு வங்கிக் கடன் என்று ஏறுமுகத்தில் இருக்கும் துறை. வரும் ஆண்டில் 8.9 சதவிகித வளர்ச்சி எதிர்ப்பார்க்கப் படுகிறது.

கல்வி, பயிற்சி மற்றும் ஆலோசனை (Education, Training and Consultancy)
தற்போதைய பணியாளர்கள் : 97,94,000
கணிக்கப்படும் புதிய வேலைகள் : 1,07,500
கல்வித்துறை எப்போதுமே புதிய பணியாளர்கள் தேவைப்படக்கூடிய துறையாகவே விளங்குகிறது. வேலை தொடர்பான கல்வியை விரும்பும் மாணவர்கள் அதிகரித்து வருகிறார்கள். எனவே பயிற்சி மற்றும் ஆலோசனை துறையின் வளர்ச்சி நிச்சயம். இந்த்த் துறைகளில் 1.1 சதவிகித கூடுதல் வளர்ச்சி எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எரிசக்தி (Energy)

தற்போதைய பணியாளர்கள் : 8,95,500
கணிக்கப்படும் புதிய வேலைகள் : 24,900
கடந்தாண்டு இந்த துறை பெரியவில் சோபித்ததாக தெரியவில்லை (நம்மூரில் கூட மின்வெட்டு மூலம் நீங்களே நேரடியாக உணர்ந்திருக்கலாம்). ஆனால் ஆண்டின் கடைசிக் காலாண்டில், இத்துறை திடீர் சுறுசுறுப்பு பெற்றது. ஆயினும் கடந்தாண்டு பெரும்பாலும் நீடித்த சோம்பல், இவ்வாண்டும் தொடரும் என்றே நிறுவனங்களில் விசாரித்த அளவில் தெரியவருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை (Renewable energy) அரசு ஊக்குவித்து வருவதால், இனி வரும் ஆண்டுகளில் இத்துறை விஸ்வரூபம் எடுக்கலாம். இருக்கும் துறைகளிலேயே மிகக்குறைவான புதிய வேலைகளை இத்துறைதான் வரும் ஆண்டில் ஏற்படுத்தும். வளர்ச்சி சதவிகிதம் 2.8 சதவிகிதம்.

சுகாதாரத் துறை (Healthcare)

தற்போதைய பணியாளர்கள் : 33,77,652
கணிக்கப்படும் புதிய வேலைகள் : 2,48,500
நம் நாட்டின் வேலைவாய்ப்புச் சந்தையைப் பொறுத்தவரை சுகாதாரத்துறைதான் சூப்பர்ஸ்டார். கடந்தாண்டு நமக்கு கிடைத்த வேலைகளில் 16 சதவிகிதம் இத்துறையில் மட்டுமே கிடைத்தது. 2012 வாக்கில் 7500 கோடி அமெரிக்க டாலர்கள் அளவிலான வர்த்தக அதிசயத்தை நிகழ்த்தப் போகும் துறை இது (இன்றைய மதிப்பில் 7500 கோடியை 50ஆல் பெருக்கிப் பாருங்கள்). சுகாதாரத் துறையோடு கூடவே மருத்துவக் காப்பீடும் பெருகி வருகிறது. மெட்ரோ நகரங்களை தவிர்த்து, அடுத்தடுத்த நகரங்களில், கிராமங்களிலும் கூட சுகாதாரத்துறையின் சேவை விரிவடைந்து வருவதால் தனியார் மற்றும் அயல்நாட்டு நிறுவனங்களுக்கு இத்துறை மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. மருத்துவ சுற்றுலா மற்றும் மருத்துவம் தொடர்பான மற்ற துறைகளிலும் நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கக்கூடும். 7.4 சதவிகித வளர்ச்சியை இத்துறை கூடுதலாக பெறக்கூடும்.

விருந்தோம்பல் துறை (Hospitality)


தற்போதைய பணியாளர்கள் : 61,11,300
கணிக்கப்படும் புதிய வேலைகள் : 2,18,200
கடந்தாண்டு சக்கைப்போடு போட்ட துறைகளில் இதுவும் ஒன்று. தற்போது ஹோட்டல் கட்டமைப்புகளில் செய்யப்படும் பெரிய முதலீடுகளை வைத்து கணிக்கும்போது, வேலைவாய்ப்புச் சந்தையில் இத்துறை நல்ல அறுவடையை செய்யும் என்று தெரிகிறது. 3.6 சதவிகித வளர்ச்சியை எதிர்நோக்கலாம்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச்சார்ந்த ஏனைய துறைகள் (IT & ITES)
தற்போதைய பணியாளர்கள் : 19,18,865
கணிக்கப்படும் புதிய வேலைகள் : 1,83,000
இந்தியாவில் வேலைவாய்ப்பை கொட்டித் தருவதில் அமைப்புரீதியாக வலுவான துறை இது. கடந்த ஆண்டும் நிறைய இளைஞர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது தகவல் தொழில்நுட்பம். தகவல் தொழில்நுட்பத்தை நம்பியோர், நிச்சயம் கைவிடப்படார். 2011ஆம் ஆண்டிலும் நிறைய பேருக்கு இத்துறை வேலைவாய்ப்பைத் தரும். கிராமப்புறங்களில் பெருகிவரும் BPO சேவை, பரவலான வேலைவாய்ப்பை பெருகவைக்கும். 9.5 சதவிகித வளர்ச்சியை காணும்.

உற்பத்தித் துறை – இயந்திரங்கள் மற்றும் கருவிகள் (Manufacturing – machinery & equipment)

தற்போதைய பணியாளர்கள் : 11,34,800
கணிக்கப்படும் புதிய வேலைகள் : 68,400
கடந்தாண்டின் இறுதிக் காலாண்டில் சிறப்பாக செயல்பட்ட இத்துறை, அதே செயல்பாட்டை இவ்வாண்டும் தொடர்ச்சியாக தொடரக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இத்துறையை சார்ந்திருக்கும் சார்பு நிறுவனங்களின் வளர்ச்சி நம்பிக்கை தரும் விதத்தில் இருக்கிறது. எனினும் கூட நாட்டில் வீங்கிவரும் பணவீக்கம், இத்துறையின் நீண்டகால வளர்ச்சி அடிப்படையில் கவலையளிப்பதாகவே இருக்கிறது. இருப்பினும் வரும் ஆண்டில் 6 சதவிகித வளர்ச்சி நிச்சயம்.

உற்பத்தித் துறை – இயந்திரங்கள் தவிர்த்து (Manufacturing – non machinery)
தற்போதைய பணியாளர்கள் : 45,08,000
கணிக்கப்படும் புதிய வேலைகள் : 2,34,400
மற்ற வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியச் சந்தையின் அபாரமான உள்நாட்டுத் தேவை, இத்துறையை பொருளாதார மந்த நெருக்கடியிலிருந்து அதிவிரைவாக மீட்டிருக்கிறது. அரசின் பொருளாதார அடிப்படைகள் மற்றும் ஊக்கமும் இந்த மீள் எழுச்சிக்கு முக்கியமான காரணம். நுகர்வோர் பொருட்கள், உணவு, டெக்ஸ்டைல்ஸ், தோல் மற்றும் அதைச் சார்ந்தப் பொருட்கள் உள்ளிட்ட உற்பத்தித்துறை ஆகியவை உள்நாட்டுத் தேவையின் அதிகரிப்பால், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று நம்பலாம். வளர்ச்சி சதவிகிதம் 5 ஆக உயரும்.

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (Entertainment & Media)

தற்போதைய பணியாளர்கள் : 13,56,300
கணிக்கப்படும் புதிய வேலைகள் : 1,26,100
2011ன் கடைசி காலாண்டில் திடீரென ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் ஏராளமான வாய்ப்புகள் இளைஞர்களுக்கு கிடைத்தது. அந்தப் போக்கு இவ்வாண்டும் தொடரும். அந்நிய முதலீட்டுக்கான கட்டுப்பாடுகள், பொருளாதார வளர்ச்சி, நகரமக்கள் பழகிக் கொண்டிருக்கும் டிஜிட்டல் வாழ்க்கை, மக்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு செலவிடப்படுவது என்று ஏராளமான காரணிகள் இத்துறையின் போக்கை நிர்ணயிக்கிறது. 9.3 சதவிகித வளர்ச்சியை இத்துறை காணக்கூடும்.

மருந்துத் துறை (Pharma)


தற்போதைய பணியாளர்கள் : 2,84,351
கணிக்கப்படும் புதிய வேலைகள் : 49,400
இந்திய மருந்து உற்பத்தித்துறை சமீப ஆண்டுகளில் சீரான வளர்ச்சியை கண்டுவருகிறது. வரும் சில ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிரடி வளர்ச்சியை எதிர்நோக்கலாம். ஒப்பந்த உற்பத்தி மட்டுமே 3000 கோடி டாலராக உயரலாம். ஒப்பத ஆராய்ச்சித்துறை மட்டுமே 600 முதல் 1000 கோடி டாலர் வரையிலான வர்த்தகத்தை செய்யக்கூடும். இவ்வளவு பணம் புழங்குவதால் இத்துறைக்கு கூடுதல் பணியாளர்கள் நிறைய தேவைப்படுவார்கள். 17.2 சதவிகித வளர்ச்சியை வருமாண்டில் இத்துறை பெறக்கூடும்.

ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானம் (Real Estate & Construction)


தற்போதைய பணியாளர்கள் : 8,59,312
கணிக்கப்படும் புதிய வேலைகள் : 1,44,700
நாட்டில் நிலையாகியிருக்கும் பொருளாதார வளர்ச்சியால் இத்துறை மீண்டும் வளர்ச்சிப் பாதையை நோக்கி திரும்பியிருக்கிறது. கடந்தாண்டு நல்ல வளர்ச்சியை அடைந்தபோதும் கூட, அது எதிர்ப்பார்ப்புக்கும் குறைவானதே. மத்திய, மாநில அரசுகள், மற்றும் தனியார் நிறுவனங்கள் பலவும் தற்போது உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களில் பெருமளவு கவனம் செலுத்துவதால், கட்டுமானத்துறை கலக்கிக் கொண்டிருக்கிறது. பெருகிவரும் சில்லறை வர்த்தகம் மற்றும் ஹோட்டல் துறை தொடர்பான புதிய கட்டமைப்பு பணிகளும் அதிக வேலைவாய்ப்புக்கு கைகொடுக்கும். எதிர்ப்பார்க்கப்படும் வளர்ச்சி சதவிகிதம் 16.4
நுகர்வோர், சில்லறை வர்த்தகம் மற்றும் தொடர்பான மற்றைய சேவைகள் (Trade including Customer, Retail and Services)
தற்போதைய பணியாளர்கள் : 8,59,312
கணிக்கப்படும் புதிய வேலைகள் : 1,44,700
உலகப் பொருளாதார வளர்ச்சி, இந்திய ஏற்றுமதியில் ஏற்பட்டிருக்கும் உயர்வு, சர்வதேச வர்த்தகம் மற்றும் சில்லறை வர்த்தகத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஆகியவற்றால் வரும் ஆண்டில் சொல்லிக் கொள்ளும்படியான வேலைவாய்ப்புகளை இத்துறை உருவாக்கித் தரும். 2014ஆம் ஆண்டு வாக்கில் 674.37 பில்லியன் (இந்த தொகையை நூறு கோடியில் பெருக்கிப் பாருங்கள்) அளவுக்கு இந்தியாவின் சில்லறை வர்த்தகம் மட்டுமே இருக்குமாம். பெரிய நிறுவனங்கள், சிறு சிறு நகரங்களில் கூட சில்லறை வர்த்தக கடைகளை, புற்றீசல் மாதிரி உருவாக்கி வருகிறது என்பதும் கணக்கில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். 5.9 சதவிகித வளர்ச்சி வரும் ஆண்டில் கிடைக்கக் கூடும்.

போக்குவரத்து, சேகரிப்பு மற்றும் தொலைதொடர்பு (Transport, Storage & Communication)

தற்போதைய பணியாளர்கள் : 26,82,600
கணிக்கப்படும் புதிய வேலைகள் : 93,300
2010ஆம் ஆண்டு நன்றாக செயல்பட்ட துறைகள் இவை. துறைமுகத்துறை சொல்லிக் கொள்ளும்படியான வளர்ச்சியைப் பெற இயலவில்லை. ஆனால் ரயில், சாலை, விமானம் ஆகிய போக்குவரத்துகள் பரவாயில்லை. எனவே போக்குவரத்துத் துறை கடந்தாண்டு ஒரு கலவையான வளர்ச்சியையே எட்டியது. தொழில் தொடர்பான சரக்கு போக்குவரத்து அதிகரித்து வருவது இத்துறையின் வளர்ச்சிக்கு கூடுதல் பலம்.
3ஜி அறிமுகம், ஒரே மொபைல் நம்பரை எந்த சேவை வழங்கும் நிறுவனத்துக்கும் மாற்றிக்கொள்ளும் மொபைல் போர்ட்டபிள் வசதி போன்றவை தொலைதொடர்புத் துறையில் கூடுதல் பணிகளை உருவாக்கலாம்.
3.5 சதவிகித வளர்ச்சியை இத்துறைகளில் எதிர்நோக்கலாம்.
இந்தியாவின் பெருநகரவாரியாக, ஒவ்வொரு நகரத்திலும் எவ்வளவு புதிய பணியிடங்கள் வரும் ஆண்டில் உருவாகும்?
அஹமதாபாத் – 7,257
பெங்களூர் – 20,794
சென்னை – 68,134
புதுடெல்லி மற்றும் தேசிய தலைநகரகப் பகுதிகள் – 1,02,616
ஹைதராபாத் – 13,489
கொல்கத்தா – 31,759
மும்பை – 1,02,884
புனே – 14,720
“தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியாவில் பத்துலட்சம் புதிய வேலைவாய்ப்புகள் அமைப்பு சார்ந்த நிறுவனங்களால் உருவாக்கப்படுகிறது என்பது நம் அனைவருக்குமே மகிழ்ச்சியான விஷயம்தான். உலகெங்கும் ஏற்பட்டு வரும் பொருளாதார மாற்றங்களால், பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் இந்தியா, சீனா ஆகிய வளர்ந்துவரும் நாடுகளில் அதிகளவில் முதலீடுகளை மேற்கொள்கின்றன. இதனால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கிறது. இந்நாடுகளின் பொருளாதாரமும் ஏற்றமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
ஆனாலும் நம் நாட்டில் பணித்திறன் குறைவாகவே இருக்கிறது. இதனால் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் பாதிக்கிறது என்பதை நாட்டின் முன்னணி மனிதவள சேவை நிறுவனம் என்கிறவகையில் எங்களால் உணரமுடிகிறது. பணித்திறனை அதிகரிக்க அரசும், தனியார் நிறுவனங்களும் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்” என்று இந்த கணிப்பு முடிவுகள் குறித்து பேசும்போது கூறுகிறார் ஈ.பாலாஜி. இவர்தான் மாஃபா ரா ராண்ட்ஸ்டாட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர்.

(நன்றி : புதிய தலைமுறை)
Continue Reading...

Friday, April 8, 2011

6 முஸ்லிம் தொகுதிகளின் ரவுண்ட் - அப்

.


முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கியைக் குறிவைத்து, தி.மு.க.
கூட்டணியில் முஸ்​லிம் லீக்கும், அ.தி.மு.க. கூட்ட​​ணியில் மனிதநேய மக்கள் கட்சியும் வரிந்து கட்டிக் களத்தில் நிற்கின்றன. இரண்டு கழகங்களும், இந்தக் கட்சிகளுக்கு தலா மூன்று தொகுதிகளை ஒதுக்கி இருக்கின்றன. இரண்டு முஸ்லிம் கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளை அறிந்துகொள்ள ஒரு ரவுண்டு வந்தோம்!

மனிதநேய மக்கள் கட்சி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்​றக் கழகத்தின் அரசியல் பிரிவு​தான் மனிதநேய மக்கள் கட்சி. இரண்டாவது முறையாக தேர்த​லை சந்திக்கும் இந்தக் கட்சிக்கு அ.தி.மு.க. அணியில், 'புதியதமிழகம்,’ சரத்குமாரின் 'சமத்துவ மக்கள் கட்சி’களைவிடக் கூடுதல் இடம். இந்தக் கட்சியின் சின்னம்... மெழு​குவத்தி.

ராமநாதபுரம்

ம.ம.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லாவை எதிர்த்து, தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ​-வான அசன் அலி களத்தில் இருக்கிறார். இலங்கை அதிபர் ராஜபக்​ஷேவின் நண்பரான அசன் அலியும், கடந்த தேர்தலுக்குப் பிறகு இப்போதுதான் தொகுதியில் தலை காட்டுவதால், மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். மேலும் இலங்கைக் கடற்படையால் மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் இவருக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், மீனவர்கள் மற்றும் ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் ஓட்டுகள் கணிசமாக ஜவாஹிருல்லாவுக்குத்தான்.

சில மாதங்களுக்கு முன்பு பெரிய பட்டணத்தில் நடந்த படகு விபத்தில் சிலர் இறந்தனர். ''இது என் தொகுதிக்குள் இல்லை!'' என்று அசன் அலி ஒதுங்கிக்கொண்டார். அந்த சம்பவம் குறித்து அங்கே நேரடியாகச் சென்று ஆறுதல் கூறி, ''பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அதிகமாகத் தர வேண்டும்!'' என்று கோரிக்கை வைத்து, ஆம்புலன்ஸ் சேவையிலும் ஈடுபட்டார் ஜவாஹிருல்லா. ''ரத்த தானம் செய்வதிலும் முன்னிலையில் இருக்கிறோம். சுனாமி சமயத்தில் நாங்கள் ஆற்றிய மீட்புப் பணிகளை மக்கள் மறக்க மாட்டார்கள்!'' என்று ம.ம.க. நிர்வாகிகள் பிரசாரம் செய்கிறார்கள்.

பிரசாரத்தில் பேசும் ஜவாஹிருல்லா, ''பம்மன் வைப்பாறு திட்டம், கடலில் கலக்கும் நீரைத் தடுத்து தடுப்பு அணைகள் கட்டுதல், ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையை மேம்படுத்துதல், பாதாள சாக்கடைத் திட்டம், ராமேஸ்வரம் புனிதத் தலத்துக்கு அடிப்படை வசதிகள் செய்தல், கச்சத் தீவு மீட்பு, மீனவர் உயிருக்​குப் பாதுகாப்பு ஆகியவற்றை நிச்சயம் செய்து காட்டுவோம்...'' என்கிறார். மொத்தத்தில் மெழுகுவத்தி... பிரகாசமாக ஒளிர்கிறது!

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி

ம.ம.க-வின் துணைப் பொதுச் செயலாளரான தமிமுன் அன்சாரி வேட்பாளர். பத்திரிகையாளர், கவிஞர், சமூக சிந்தனையாளர் என்று பன்முகம்கொண்டவர். துடிப்புமிக்க இளைஞர்கள், மாணவர்கள் படை அவருக்குப் பின்னால் தோள் கொடுக்​கிறது. ''கடந்த மூன்று தேர்தல்களில் இங்கே போட்டியிட்ட முதல்வர் கருணாநிதி, இப்போது உங்களைக் கை கழுவிவிட்டு திருவாரூக்கு ஓடிவிட்டார். அங்கே போட்டியிட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவர் முடிவு செய்துவிட்டதால், சேப்பாக்கம் தொகுதியில் செய்ய வேண்டிய பணிகளை எல்லாம் கிடப்பில் போட்டுவிட்டார்கள். தி.மு.க-வின் ஜெ.அன்பழகன், சினிமா விநியோகஸ்தர். அவர் எம்.எல்.ஏ-வாகி என்ன சாதிப்பார்? மக்களைப்பற்றிக் கவலைப்படுவாரா?'' என்று முழங்கும் தமிமுன் அன்சாரியின் பிரசாரம் படுவேகத்தில் இருக்கிறது. இந்தத் தொகுதியில் சுமார் 50 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். 'ஜெயலலிதாவின் பிரசாரத்துக்குப் பிறகு அன்சாரியின் வெற்றி உறுதியாகிவிடும்’ என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்!

ஆம்பூர்


புதிதாக உருவாக்கப்பட்ட ஆம்பூர் தொகுதியில் நிற்கும் ம.ம.க. வேட்பாளர் அஸ்லம் பாஷாவுக்கு எதிராக, காங்கிரஸின் விஜய் இளஞ்செழியன் நிற்கிறார். 'இந்தத் தொகுதியில் எப்படியாவது ஸீட் வாங்கிவிட வேண்டும்!’ என்று காங்கிரஸ் பிரமுகர் பாலூர் சம்பத் கடைசி வரை போராடியும் ஸீட் கிடைக்கவில்லை. ஆகவே, இப்போது அவர் போட்டி வேட்பாளர். சம்பத்துக்குத் தொகுதிக்குள் ஓரளவுக்கு செல்வாக்கு இருப்பதால், இளஞ்செழியனுக்குக் கொஞ்சம் கஷ்டம்தான். கதர் சட்டைகளுக்குள் நடக்கும் மோதல் காரணமாக அஸ்லம் பாஷா முன்னேறிக்கொண்டு இருக்கிறார். இந்தத் தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் அ.தி.மு.க-வுக்கு செல்வாக்கு அதிகம். அதனால், இப்​போ¬​தய நிலவரப்படி அஸ்லம் பாஷாவின் வெற்றி, கனிந்தே இருக்கிறது!





முஸ்லிம் லீக்

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் முஸ்லிம் லீக், இந்த முறையும் உதயசூரியன் சின்னத்தில்தான் களத்தில் குதித்து இருக்கிறது. தொகுதிப் பங்கீடு நேரத்தில் முதலில் மூன்று தொகுதிகள் கிடைத்தன. அதன் பிறகு இரண்டாகக் குறைக்கப்பட்டு, கடைசியில் மீண்டும் மூன்று தொகுதிகளே வழங்கப்பட்டன.


திருப்பூர்

அல்தாப் உசேன், இங்கே வேட்பாளர். பல ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வந்த 'தமிழ் மாநில தேசிய லீக் கட்சி’யின் தலை​வராக இருந்தவர். ஆனால், ஒரு முறைகூட இவருக்குத் தேர்தலில் போட்டியிட தி.மு.க. வாய்ப்புத் தரவில்லை. அதன் பிறகு தன் கட்சியை, முஸ்லிம் லீக்கோடு இணைத்தார். இப்போது வேட்பாளராக நிற்கிறார். இதனால், முஸ்லிம் லீக் கட்சியில் அதிருப்தி நிலவுகிறது. அல்தாப் வெற்றி பெற்றால், முஸ்லிம் லீக் கட்சியைக் கைப்பற்றிவிடுவார் என்று அவரைத் தோற்கடிக்க, கட்சிக்குள்ளேயே உள்ளடி வேலைகள் நடக்கின்றனவாம்.

முழுக்க முழுக்க தி.மு.க-வின் ஓட்டுகளை நம்பியே ஓடிக்கொண்டு இருக்கிறார் அல்தாப். ஏற்கெனவே, பூங்கா நகர் தொகுதியில் இருந்த சௌகார்பேட்டை போன்ற பகுதிகள், தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, துறைமுகம் தொகுதியில் சேர்க்கப்பட்டன. மார்வாடி இன மக்கள் சௌகார்பேட்டையில் கணிசமாக வசிப்பவர்கள். அவர்களின் ஓட்டுகள் எப்போதுமே தி.மு.க-வுக்கு விழுந்தது கிடையாது. மேலும் எதிர் அணியில் அ.தி.மு.க. வேட்பாளரான பழ.கருப்பையாவின் பிரசாரத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவிக்கிறார். சுமார் 30 ஆயிரம் முஸ்லிம் ஓட்டுகள் துறைமுகம் தொகுதியில் இருக்கின்றன. அதை அல்தாப் நம்பிக்கொண்டு இருந்தாலும், பழகருப்பையாதான் ரேஸில் முந்துகிறார்!

நாகப்பட்டினம்

முக்கியக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில், நான்காவது இடத்தில் இருக்கிறார் நாகையில் போட்டியிடும் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஷேக் தாவூத். நகர்ப் பகுதிகளிலும் முஸ்லிம் ஜமாத்துகளிடம் மட்டுமே ஓட்டு கேட்டு வருகிறார். மிகப் பெரிய தொழில் அதிபர். கப்பல்கள், தொழிற்சாலைகள், வைர வியாபாரம் என்று பசை உள்ள பார்ட்டியாக ஷேக் தாவூத் இருந்தாலும், 'அவரிடம் இருந்து பணம் எதுவும் வந்து சேரவில்லை’ என்று தி.மு.க. உட்பட கூட்டணிக் கட்சியினர் புலம்புகிறார்கள். வேட்பு மனுத் தாக்கலின்போது, விண்ணப்பத்தில் சில இடங்களில் அவர் கையெழுத்துகூடப் போடவில்லை. இதைக் கவனித்த தி.மு.க. எம்.பி-யான ஏ.கே.எஸ்.விஜயன், 'இதைக்கூடவா சரியா செய்யத் தெரியாது!’ என்று நொந்துகொண்டார். பிரசாரத்துக்கு கனிமொழி வந்தபோதும், தி.மு.க-வினர் சரியான அளவில் கூட்டம் சேர்க்கவில்லை. பணம் இறங்கட்டும் என்று வேலை செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ''ஷேக் தாவூத் நல்ல தொழில் அதிபர். ஆனால், அரசியலுக்கு சரிப்பட்டு வர மாட்டார்!'' என்று தி.மு.க-வினரே முணுமுணுக்கிறார்கள். கடந்த முறை இந்தத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ஜெயபால், அ.தி.மு.க. சார்பில் நிற்கிறார். இந்த முறை ஜெயித்தே தீருவது என்ற முடிவில் தீவிரமாக இவர் வேலை பார்க்கிறார். தொகுதிக்குள் இருக்கும் 40 ஆயிரம் முஸ்லிம் ஓட்டுகள்தான் ஷேக் தாவூத்துக்கு ஆறுதல் அளிக்கின்றன. கடைசி நேரத்தில் வாக்காளர்கள் மனம் மாறினால், ஜெயபாலுக்கு ஜெயம் கிடைக்கும்!

வாணியம்பாடி

சிட்டிங் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் பாசி மீண்டும் களத்தில் நிற்கிறார். ''அப்துல் பாசி, தொகுதிக்குப் பெரிதாக எதையும் செய்யவில்லை!'' என்று பரவலாகப் பேச்சு அடிபடுகிறது. தொகுதியில் அடிப்படை வசதியான சாலை வசதிகள்கூட ஒழுங்காக இல்லை. இதோடு, தி.மு.க. நகரச் செயலாளர் சிவாஜி கணேசன், தனக்கு ஸீட் தராததால் உள்ளடி வேலைகளில் இறங்கிவிட்டார். இந்தத் தொகுதியில் பெரிதாக எந்த சாதனையும் செய்யாததால், தி.மு.க. அரசின் சாதனைகளையும் தி.மு.க. தேர்தல் அறிக்கையும் சொல்லி ஓட்டு கேட்டு வருகிறார் அப்துல் பாசித்.

இவருக்கு எதிரே அ.தி.மு.க. சார்பில் கோவி.​சம்பத்குமார் நிற்கிறார். புதுமுகம் என்றாலும், தொகுதி மக்களுக்கு அறிமுகம் என்பதால், சுறுசுறுவென தேர்தல் வேலை செய்கிறார். அப்துல் பாசித் மீது இருக்கும் அதிருப்தியும், தி.மு.க-வினரின் உள் குத்து காரணமாகவும் சம்பத்குமாருக்கு நல்ல யோகம்!

- எம். பரக்கத் அலி.

நன்றி, ஜூனியர் விகடன்
Continue Reading...
 

Blogroll

Text

Adirai Youth Development Association (AYDA) Copyright © 2009 WoodMag is Designed by Ipietoon for Free Blogger Template