Tuesday, October 18, 2011

அய்டாவின் தன்னிலை விளக்கம்!

அஸ்ஸலாமு அலைக்கும்,

அய்டா என்பது பொது நல அமைப்பாக இருந்தாலும், ஒரு பொதுவான நல்ல தலைவரை தேர்ந்து எடுக்க எப்படிஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கி--றதோ அதே உரிமை,அய்டா மட்டும் அல்ல,அய்டா போன்ற அனைத்துபொதுநல அமைப்புகளுக்கும் தலையாய கடமையாகும்.
நிற்க, ஆரம்பத்திலிருந்து இன்றுவரை அய்டா எந்த ஒரு நிறுவனத்தின் கிளையாக இருந்ததில்லை/இருக்கவில்லை. மாறாக AYDA முழு சுதந்திரத்தோடு அனைத்து தரப்பட்ட அதிரைவாசிகளின் நலனுக்காகத்தான் இருக்க விரும்புகிறது. அது மட்டுமல்லாது கடந்த 5 வருடங்களாக அதிரை பைத்துல்மாலுக்கு உதவி செய்ததைவிட மற்ற தொண்டு நிறுவனகளுக்குதான் பல மடங்கு அதிகமாக உதவி இருக்கிறோம்.


AYDAவின் தேர்தல் நிலைப்பாடு ஒரு சில மக்களுக்கு கவலையான மற்றும் குழப்பமான சூழ்நிலை ஏற்படுத்திவுள்ளது என்பது ஓரளவு உண்மை என்றாலும், ஒட்டு மொத்த அதிரை மக்களும் கீழ்கண்ட குழப்பமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதால்தான், நாங்களும் இதில் கொஞ்சம் கூடுதல கவனம் செலுத்த வேண்டி இருந்தது.

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் நமதூர் மக்கள் நலன் கருதி வரக்கூடிய தேர்தலில் நம்மில் ஒருவரை முன்னிறுத்தி ஒரே கோட்டில் எல்லோரையும் நிற்க வைக்கும் முயற்சியில் இறங்கிய அடுத்த கணமே, போட்டா போட்டி கொண்டு தன்னிடம் உள்ள செல்வாக்கு மற்றும் பண பலத்தை வைத்து எல்லா அரசியல் கட்சியின் கதவையும் தட்டி, ஒரு வழியாக ஒவ்வொருவரும் மாநிலத்தின் பலம் வாய்ந்த கட்சியில் சீட்டு வாங்கி, ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினார்கள். அப்படி செல்வாக்கு மற்றும் பண பலம் இல்லாவிட்டால் அந்த பலம் வாய்ந்த கட்சியிளில் சீட்டு கிடைத்திருக்குமா என்றால் அது கேள்விக்குறியே! அதோடு அல்லாமல் பலம் வாய்ந்த ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் உட்பட்டவர்கள் என்பதால் தான், தமக்கு பெரிய கட்சிகளின் சீட்டு கிடைத்தது என்று அவர்களுக்கும் நன்றாக தெரியும்.
கடந்த 40 வருடமாக நமதூரை ஆட்சி செய்தவர்களும் அரசியல் வாழ்க்கை நடத்தியவர்களும் பெயர் சொல்லும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. மாறாக தேவையற்ற பிரச்சனைகளை தான் அதிகமாக கிளப்பி விட்டு இருக்கிறார்கள். ஆனால் நமதூரில் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்தான் ஏதோ வந்தோம் இருந்தோம் என்றில்லாமல் கல்வி, வணக்கஸ்தலம், மருத்துவமனை, மின்சாரம், இன்னும் பல எத்தனையோ அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மிகப்பெரும் தூணாக நின்று செய்தார்கள். அப்படியும் ஊர் நன்மைக்காக தானாக முன்வந்து செய்யகூடியவர்களை கட்சிக்காரர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்களா என்றால் அதுவும் இல்லை, மாறாக எங்களை மதிக்கவில்லை என்று சொல்லி மழுப்பி விடுகிறார்கள். காரணம், கட்சிகாரர்கள், காண்ட்ராக்ட்காரர்கள், வட்ட, மாவட்ட தலைவர், மற்றும் MLA க்களுக்கு விருந்து கொடுத்து திருப்தி படுத்தவே நேரம் சரியாக இருக்கும். அவ்வழியே புதிதாக அரசியலில் நுழைந்திருக்கும் நம்மவர்களிடமும் எப்படி நாம் ஒரு புது மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்.

அதனால் அந்த வகையில் சகோ. முனாஃப் என்று, ஒருதலை பட்சமாக இல்லாமல் 40 வருடத்திற்கு பிறகாவது ஒரு சுயேச்சை வேட்பாளரை தேர்தெடுக்க ஒரு புதிய முயற்சியை கையாள்வோம், என்பது மட்டுமல்லாமல் வருங்காலத்தில் வரக்கூடிய தேர்தலில் 70 வருட பாரம்பரியமிக்க ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் இதர சங்கங்களையும் மதிப்பளிக்க கூடிய மனிதரைத்தான் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்த்டுப்போம் என்பதன் தொடக்கம் தான் இது.

அதைவிட கட்சியின் சார்பாக நிற்பவர்கள் நமதூர் மக்களுக்கு பண பட்டுவாடா செய்து சுயமரியாதையுடன் வாழும் நம் ஒவ்வொருவரையும் கேவலப்படுத்தி இருக்கிறார்கள். இந்த வகையில் சகோ. முனாப் அவர்கள் தேர்தல் கமிஷனுக்கு உட்பட்ட பணத்தை மட்டும் செலவு செய்து அவர் எளிமையாக வாக்கு சேகரிக்கிறார். அதனால் தான் ஹராம் ஹலால் பேனக்கூடியவர் என்று குறிப்பிட்டோம். அப்படி ஒரு வேலை சகோ. முனாபும் பணப்பட்டுவாடா செய்து ஆடம்பரமாக வாக்கு சேகரித்திருந்தால் நாங்கள் (சுயேச்சை வேட்பாளரான) முனாஃபுக்காக மக்களிடம் கேட்ட வாக்கை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக திரும்ப பெற தயாராக இருக்கிறோம்.


நிற்க, கண்டிப்பாக நாம் யாராவது ஒரு வேட்பாளரை மறைமுகமாக ஆதரிக்கத்தான் போகிறோம், ஊர் ஒற்றுமை என்ற பெயரில் இரட்டை வேடம் போடுவதில் அர்த்தமில்லை, (ஓட்டு கேட்டு வரும் அனைத்து வேட்பாளர்களிடமும்உங்களுக்குத்தான் எங்கள் ஓட்டு என்று சொல்லிவிட்டு முனாஃபிக் தனமாகஒருவருக்கு மட்டும் தான் ஓட்டுபோடப்போகிறோம், பாவம் அந்த வேட்பாளர் தான் அறியமாட்டார் ஆனால் நம்மை படைத்த இறைவன்நன்கறிவான்) எனவே உள் ஒன்று வைத்து புறம் ஒன்று சொல்வதில் அய்டாவுக்கு உடன்பாடு இல்லை.



குறிப்பு:
நாங்கள் எந்த வேட்பாளரையும் குறைகூறவில்லை. 'எல்லோரும் சிறந்--தவர்களே' என்றே சொல்லியுள்ளோம்.இவரிடம் சற்று நிறை கூடுதல் தெ--ன்படவே ஒருமித்தக் கருத்து ஓங்கியது! அய்டாவின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அனைத்துவேட்பாளர்களும் ஏதாவது ஒரு வகையில் வேண்டியவர்களாகவும், உறவினர்களாகவுமே இருக்கின்றனர்.. எனினும் ஊர் நலனில் உண்மையான அக்கறை கொண்டு யார் முன்வந்தாலும் 'யாருக்கு பொறுப்பு தரப்பட்டாலும்' அன்புடன்அய்டா பாசமிகு நேசக்கரம் நீட்டும்.


வஸ்ஸலாம்.

AYDA

0 comments:

Post a Comment

 

Blogroll

Text

Adirai Youth Development Association (AYDA) Copyright © 2009 WoodMag is Designed by Ipietoon for Free Blogger Template