Tuesday, June 29, 2010

சாதிக்கப்போவது யாரு...?

தங்களால் மட்டுமே சாதிக்க முடியும், எங்கள் பள்ளிகளில்தான் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி கொடுக்கமுடியும் என்று பெருமை அடித்துக்கொள்ளும் தனியார் பள்ளிகளுக்கு நாங்கள் என்றும் சளைத்தவர்கள அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் வெளிவந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவி சகோதரி ஜாஸ்மின் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்தார். இதனால் மற்ற அரசுப்பளிகளும் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகலும் தங்கள் காலரை தூக்கி விட்டுகொண்டுள்ளன.
இதை பறை சாற்றும் வகையில் நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளும் தங்கள் மாணவ, மாணவிகளுக்கு தந்த சரியான பயிற்றுவிக்கும் முறையால், நூற்றுக்கு நூறு சதவீத தேர்ச்சியை காண முடிந்தது, இதில் மாணவிகள், மாணவர்களைவிட திறமைசாலிகள் என்பதை மீண்டும் நிரூபித்தனர்.
கையில் கொஞ்சம் வசதி இருந்தால் மட்டுமே பயில முடியும் என்ற சூழலில் உள்ள இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிகுலேஷன் பள்ளியின் நிலை என்ன? ஆங்கிலத்தில் தம் பிள்ளைகள் பேசலாம், பயிற்றுவிப்பு முறையில் உயர்தரம் இருக்கும் மேலும் மேற்படிப்புக்கு இலகுவாக இருக்கும் என்பதால் பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு இது போன்ற தனியார் பள்ளிகளை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் எதில் தவறு நடக்கிறது என்று தெரியாமலேயே இதன் தேர்ச்சி விகிதம் சமீபத்தில் குறைந்து வருவது ஏன்?
பிள்ளைகள் பயில்வதற்கு , பெற்றோருக்கு நேர்முக தேர்வு, மற்றும் பலவிதமான வகையில் மாணவர்களுக்கும் தேர்வு நடத்தி பள்ளியில் சேர்கின்றன சில தனியார் கல்வி நிறுவனங்கள், அவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என்றால் தானாகவே பள்ளியை விட்டு வெளியேறும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து அவர்கள் பள்ளியிலிருந்து வெளியாக்கப்படுகின்றனர் .
இதற்க்கு உதாரணம் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை பயின்ற மாற்றுதிறன் கொண்ட மாணவனுக்கு சரியாக கல்வியில் நாட்டமில்லாமல் மிக குறைந்த மதிப்பெண்ணே எடுக்கும் காரணத்தால் அந்த மாணவனோடு யாரையும் அண்டவிடாமல் அவனுக்கு பைத்தியம் என்று கூறி வகுப்பிலும் தனிமை படுத்தப்பட்ட சூழலில் அந்த மாணவன் தானாகவே பள்ளியைவிட்டு விலகும் அளவுக்கு மன ரீதியாக நெருக்கடி கொடுத்திருக்கிறது. இதனால் மனம் நொந்த அந்த மாணவனின் பெற்றோர் அரசு பள்ளியை நாடியிருக்கின்றனர் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அரசுப்பளியில் சேர்த்திருக்கின்றனர் இப்போது நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு பொது தேர்வில் 60சதவீத மதிப்பெண் பெற்று தேரியிருக்கிறான் அந்த மாணவன். அப்படியானால் 5 மதிப்பெண்கூட எடுக்கமாட்டன் என்று தனியார் பள்ளி ஒதுக்கிய அந்த மாணவனுக்கு 60 சதவீத மதிப்பெண் எப்படி கிடைத்தது?. அப்படியானால் சராசரி மாணவர்களுக்குகூட பயிற்றுவிக்கும் வகையில் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு திறமை இல்லையா?.
தான்தான் சரியாக படிக்கவில்லை தன் பிள்ளைகளாவது நன்றாக படிக்கவேண்டும் என்ற ஆசையில் தனக்கு தகுதி, வசதி இருக்கிறதோ இல்லையோ ஆனால் தன் பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதிற்கொண்டு எப்பாடு பாட்டாவது கல்விக்காக செலவு செய்ய தயாராக இருக்கின்றனர் நடுத்தர பெற்றோர்கள்.
இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிகுலேஷன் பள்ளியின் நிர்வாகிகள், நமதூரின் எதிர்காலத்தையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் நிறையவே சிந்திப்பவர்கள் வெளியில் தெரியாத சேவைகளை செய்து வருபவர்கள், இதை மனதில் கொண்டுதான் பேராசிரியர் பரகத் அவர்களை முதல்வராக தேர்ந்தேடுத்திருக்கின்றனர் இதற்க்காக இந்நிர்வாகம் நன்றிக்கும் பாராட்டிற்கும் உரியவர்கள்.
பேரா. பரகத் அவர்கள், அக்காலம் முதலே மாணவர்களின்மீது நல்ல அக்கறையும் ஆக்கப்பூர்வமான் அறிவுரைகளும் வழங்கி வருபவர் மேலும் மிகச்சிறந்த பொது நல சேவகரும் கூட, இவர் இப்பள்ளிக்கு, எல்லோரும் மெச்சும் அளவுக்கு ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்றே நம்புகிறோம். இது இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின், பெற்றோர்களின் ஆசை.


இவ்வருடம் சாதிக்கப்போவது யார் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிகுலேஷன் பள்ளியா?, காதிர் முகைதீன் மேல்நிலை பள்ளியா?.
எல்லா பள்ளிகலுமே சாதிக்கவேண்டும் என்பதுதான் நம் அனைவரின் ஆசையும்.
வல்ல அல்லாஹ் நம் எல்லா மாணவர்களுக்கும் இவ்வுலக மறுவுலக கல்வியிலும் வாழ்விலும் வெற்றியை தருவானாக ஆமீன்.

0 comments:

Post a Comment

 

Blogroll

Text

Adirai Youth Development Association (AYDA) Copyright © 2009 WoodMag is Designed by Ipietoon for Free Blogger Template